வெள்ளிக்கிழமைகளில் செய்யக் கூடாது விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: எந்த காரியங்கள் செய்யக்கூடாது... பொதுவாகவே வெள்ளிக் கிழமை அதிர்ஷ்ட தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் மாசி மாத வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்தது. அதனால் எப்போதுமே வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களைச் செய்ய மறந்தாலும் நிச்சயமாக அதற்கு நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்திடாதீங்க.

அதனால் நம்மை விட்டு அதிர்ஷ்டமும் செல்வமும் விலகி போக ஆரம்பித்து விடும். மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும் நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால் லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.

அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. அதனால் இதை மட்டும் கண்டிப்பாக செய்துவிடாதீர்கள். அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால் அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம்.

எவ்வளவோ சம்பாதித்தாலும் பொருள், வீடு வந்து சேரல… நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைப் பார்க்கலாம். அது ஏன்னு பார்த்தால் இதனால் தான் இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. முடிந்தவரை வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்