திருச்செந்தூரில் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி

விசேஷமான அமைப்புடன் திருச்செந்தூரில் அருள்பாலிக்கிறார் மேதா தட்சிணா மூர்த்தி.

தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர்.

வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

தாமிரபரணிக்கரை குரு ஸ்தலங்கள் நவக்கிரகங்களில் குருபகவானை 'புத்திர காரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே.

குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற தலங்களில் தரிசனம் செய்து, தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.