பாரியூர் அம்மன் கோவில் தேர்திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் அம்மன் கோவிலில் நடக்கும் தேர்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது. கோபி நகர்மன்ற உறுப்பினர் முத்துராமன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மலர்பள்ளம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கோபி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையும், சாலையை கடக்க தானியங்கி நடைமேடையும் 6 மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று கூறினார்.