நவராத்திரி விழா உற்சாகத்துடன் தொடங்கியது

நவராத்திரியை விழா தொடங்கியது... வீடுகள் தோறும் கொலு வைத்து வழிபாடுகள் நடக்க ஆரம்பித்துள்ளது.

வடநாட்டில் தசரா என்றும் தென்னிந்தியாவில் நவராத்ரி என்றும் பத்து நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகை இது. சரஸ்வதி, மஹாலட்சுமி மற்றும் மஹாசக்தி ஆகிய முப்பெரும் தேவியருக்கு உகந்த நாட்களாக கருதப்படும் இந்த ஒன்பது நாட்களும் புஜைகள், நெய்வேத்யம் பக்தி பாடல்கள் இவற்றோடு சேர்த்து தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு.

கொலு என்றால் பொம்மைகளை முறையான வரிசையில் அடுக்கி வைப்பது பண்டிகையின் வழக்கங்களுள் ஒன்று. கொலு பொம்மைகளை சில குடும்பங்களில் தங்கள் பரம்பரை சொத்தாக கருதி அதனை வழி வழியாக பரம்பரை பரம்பரையாக கொடுப்பதும், பெற்றவர்கள் பாதுகாப்பதும் வழக்கம். வழக்கமான கொலு முறையை தாண்டி, இன்றைய நவீனத்துவத்துடன் சில புதிய கருத்துருவாக்கங்களும் இணைந்துள்ளன. பழமையும், புதுமையும் இணைந்து சுவரஸ்யமான கொலு படிகளை இன்று உருவாக்க முடியும்.

இதில் முதல் இடம் பிடிப்பது, குடும்பம் போன்ற அமைப்பு. உதாரணமாக நம் புராணங்களின் காட்சிகளை இராமாயணம் என்றால் சீதை, இராமர், இலக்குவன், அனுமன் போன்ற காட்சி. சிவன், பார்வதி குடும்ப சகிதமாக, மஹாபாரதம் போன்ற புராண காட்சிகள் கொலுவுக்கு சுவரஸ்யம் ஊட்டும். இதற்கு முதலில் நாம் எத்தனை படி கொலு, ஒவ்வொரு படியில் இடம்பெற வேண்டிய மொத்த பொம்மை. பின் கருத்துருவாக்கம் அதற்கு தேவைப்படும் பொம்மைகளை ஓரு வரைப்படம் போல முதலில் காகிதத்தில் வரைந்து கொள்ள வேண்டும்.

பின் தேவைப்படும் பொம்மைகளை வாங்க எளிதானதாக இருக்கும். இன்று பெரும்பாலான கோவில், நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய கொலு இடங்களில் இடம்பிடிக்கும் மற்றொரு கருத்துருவாக்கம், கிராம அமைப்பு. இதில் பொம்மைகளுக்கான இடம் அதிகம் ஆடு, மாடு, மரம், ஏரி வயல்வெளி, மனிதர்கள், அழகான பசுமை வீடு போன்றவைகளை வைக்க முடியும். அடுத்த முக்கியமான இடம் கல்யாண அமைப்பு. ஐயர், மாப்பிளை, பெண், அம்மி, ஹோமம் என இதிலும் பொம்மைக்கான வாய்ப்புகள் அதிகம்.

பழக்கூடை, பின் மஹாவிஷ்ணுவின் அவதாரம், இன்றைய நவீன கொலு பொம்மையில் அரசியல் தலைவர்களை கூட வைக்க சிலர் தவறுவதில்லை. பிரபஞ்ச மேடையில் அனைவரும் பொம்மையே என்கிற பெரும் தத்துவம் யாருக்கும் புரியாமல் இல்லை.