கடன் தொல்லையை நீக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

நவநிதியளிக்கும் குபேர தீர்த்தம் பற்றி இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில். இத்திருத்தலத்தின் மூலவரான வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.

தாயாராக குமுதவல்லி அருள்பாலிக்கிறார். நம்மாழ்வார் 12 பாடல்கள் பாடியும், மணவாள மாமுனிகள் மங்களாசனம் செய்ததும் இத்திருத்தலத்திற்கு மேலும் ஒரு சிறப்பு. பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலகின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார்.

பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார். என்பது இத்தல வரலாறு.

இத்தலத்தில் குபேர தீர்த்தம், தாம்பிரவருணி நதி ஆகியவற்றைத் தீர்த்தங்கள் தல தீர்த்தமாக அமைந்துள்ளன. ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள்.

கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். கடன் தொல்லைகளைத் தீர்த்து, செல்வத்தை பெருக்கும் இத்தல பெருமாளுக்கு தினமும் 5 கால பூஜை நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை, புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் பொதுமக்களால் வார சிறப்பு நாட்களாகக் கொண்டு வணங்கப்படுகின்றன.