இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைவு

சென்னை: தங்கத்தின் விலை குறைவு ... பண்டிகை மற்றும் திருவிழா ஆகிய சிறப்பு வாய்ந்த நாட்களில் தங்கத்தின் விலையானது வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். அன்றைய தினம் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதனை பொறுத்து விலை உயர்த்தப்படுகிறது.

இதையடுத்து இந்நிலையில், தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலையானது 1 கிராமிற்கு ரூ.5,000 க்கு மேல் சென்றுள்ளது.

அதிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 5060 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று 22 கேரட் தங்கம் 1 கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ. 5045 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 1 சவரன் ரூ. 40360 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5447 க்கும், 1 சவரன் 43576 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக, வெள்ளியானது நேற்று ரூ.72.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 1 கிராம் வெள்ளி 72.50க்கும், 1 கிலோ ரூ. 72500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.