இன்று குறைந்தது தங்கம்


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த 2 நாட்களாக எந்த விதமான மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து விற்பனை ...

தங்க நகைகள் அணிகலன்களாக மட்டுமின்றி சிறந்த முதலீடாகவும் கருதப்பட்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு இரண்டு மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.கிராமுக்கு ரூபாய் 20 குறைந்துள்ள நிலையில் 1 கிராம் தங்கத்தின் விலை 5,530 ஆக விற்பனையாகிறது. அதேபோன்று 1 சவரன் தங்கத்தின் விலை ஆனது 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.