இம்மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை

சென்னை: இன்றைய தங்கத்தின் விலை ... தமிழகத்தில் தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் அதிரடி அதிகரிப்பை கண்டது. கடந்த மாதம் ரூ. 39 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான தங்கத்தின் விலையானது இம்மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து ரூ.40 ஆயிரத்தை தொட்டது.

எனினும் பொதுமக்களிடம் தங்கத்தை வாங்குவதற்கான ஆர்வம் குறைவதில்லை. மேலும் அயல் நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துகின்றனர்.இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதன் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

எனவே அதன்படி கடந்த 5ம் தேதி அன்று தங்கத்தின் விலை ரூ.40,360 என அதிரடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டது. அதன்படி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.40,080 என விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6 என அதிகரித்து ரூ. 5,016 என விற்பனையாகிறது. இதையடுத்து ஒரு சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40,128க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.71க்கும் இதே போன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.