ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்த விவரம்

சென்னை: வணிக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து தான் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது அதிக அளவில் அதிகரித்து உள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக நிலவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தான் இந்த விலை அதிகரிப்பிற்கு காரணமாக கருதப்படுகிறது.இந்த நிலையில், ஞாயிற்று கிழமை வணிக சந்தை விடுமுறை என்பதால்,

நேற்றைய மாலை நேர நிலவரத்தின் படி 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5640 க்கும் 1 சவரன் ரூ.45,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.6,153 க்கும், 1 சவரன் ரூ. 49,224 க்கும் விற்பனை விற்பனையாகிறது.

இதேபோன்று, வெள்ளி 1கிராம் ரூ.80.20 க்கும், 1 கிலோ ரூ.80,200 க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. போக போக ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து கொண்டே செல்வதை நினைத்து மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.