இந்த பங்குகளின் மீது முதலீடு செய்தால் லாபம் என நிபுணர்கள் கருத்து

இந்தியா: இதில் முதலீடு செய்தால் லாபம் .... இந்தியாவில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மத்திய அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலை காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட்டை தயாரிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.இந்த பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு, மருத்துவ காப்பீட்டுக்கான நிவாரணம் அதிகரிப்பு உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிக்க MNREGAக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்படலாம்.

இதையடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீர், சாலை, வீட்டுவசதி உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றிற்கு இப்பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் நுகர்வு மற்றும் வருமானத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் சிமெண்ட், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளின் தேவை உயரும்.

மேலும் BFSI, உள்கட்டமைப்பு, Real Estate, கட்டுமானம் மற்றும் எரிசக்தி துறை பங்குகளில் முதலீடு செய்வது லாபம் ஏற்படலாம். பட்ஜெட் வெளியாவதற்கு முன்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல்&டி, பஞ்சாப் நேஷனல் வங்கி, டாபர், PNC Infratech, APL Apollo, Finolex Cables, Gati, Hi-tech Pipes, Macrotech Developers, Mahindra Logistics போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் பெறலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.