சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் தற்சமயம் லீக் ஆகி இருக்கின்றன.

அதன்படி புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஹெச்டி பிளஸ் AMOLED பன்ச் ஹோல் ஸ்கிரீன், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமராக்கள் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-எம்515எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என்றும் விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.