மீண்டும் உயந்த தங்கம்

சென்னை: இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே தங்கத்தின் விலையானது எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியால் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.44,000 – ஐ கடந்து விற்பனையானது.

தினசரி பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஏற்றமடைந்து வந்த தங்கத்தின் விலையால் சாமானியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாத சூழலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த ஒரு வார காலமாக ஆபரணத்தங்கத்தின் விலை சற்று சரிந்தே வருகிறது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்ந்து ரூ. ரூ.41,656 க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 உயர்ந்து ரூ.5,207க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.20-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.