இன்று சற்று குறைந்தது தங்கம் விலை

சென்னை: இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை ..சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

கடந்த வெள்ளிக் கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.45,640 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 1 கிராம் ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.


இதையடுத்து சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.46,160 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று 1 கிராக்கு 65 ரூபாய் அதிகரித்து 1 கிராம் தங்கம் ரூ.5,770க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.