தங்கம் விலை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை குறைந்தாலும், உயர்ந்தாலும் குறைந்தபட்ச சேமிப்பிற்காக அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி கொண்டு வருகின்றனர்.இதையடுத்து அட்சய திருநாளில் தங்கம் வாங்கினால் செல்வம் மென்மேலும் பெருகும் என்ற காரணத்தினால், அன்றைய நாளில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் நகை வாங்குகின்றனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு அட்சய திருநாளில் 20 சதவீதம் அதிகமான தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்சய திருதி முடிந்தும் தங்கம் விலை குறையாமல் இன்றும் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் மிகவும் கவலையை ஏற்படுத்திவுள்ளது.

அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5615.00-க்கு விற்பனை ஆகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60960-க்கு விற்பனை ஆகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.48,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது.