விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை உயர்வு


சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,320க்கும் விற்பனை ...தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்ல நாளில் பெரும்பாலான தாய்மார்கள் நகை வாங்க ஆர்வம் செலுத்துவதால் தங்க நகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,000க்கும், சவரனுக்கு ரூ.48,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,530 க்கும், சவரனுக்கு ரூ. 44,240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,010க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 48,080க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5540க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 44,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.