கூகுள் லென்சின் அருமையான வசதி... சூப்பர் வசதி!!!

புதிய வசதி... அருமையான வசதியை கொடுக்கிறது கூகுள் லென்ஸ். கூகுள் தனது படைப்பான கூகுள் லென்ஸில் ஒரு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .இதன் மூலம் உங்கள் கையால் எழுதும் குறிப்புகள் ,படிக்கும் செய்திகளை எளிதாக கூகுளை லென்ஸ் வழியாக காப்பி செய்து உங்கள் கணினியில் பேஸ்ட் செய்ய முடியும் .

இந்த புதிய வசதியை பயன்படுத்த, நீங்கள் Google Chrome இன் சமீபத்திய பதிப்பையும்( new version ),முழுமையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டையையும் வைத்திருக்க வேண்டும் .நீங்கள் இரண்டு சாதனங்களிலும் ஒரே Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.

இதை பயன்படுத்துவது சுலபம் தான் நீங்கள் கையால் எழுதி எடுக்கும் குறிப்புகளையோ அல்லது படிக்கும் செய்திகளையோ கூகுள் லென்ஸ் வழியாக பாருங்கள். பின்பு அதில் கொடுத்திருக்கும் டெக்ஸ்ட் என்ற ஐகானை கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் வழக்கம் போல காப்பி செய்வது போல் செய்து உங்கள் கணினியில் உள்ள கூகுள் டாக்குமென்டில் எடிட் என்பதை கிளிக் செய்து அதில் இருக்கும். பேஸ்ட் கிளிக் செய்தால் நீங்கள் காப்பி செய்தது அங்கு வந்துவிடும்.