ஆன்லைன் மளிகை வர்த்தகம் உயரும் என்று தகவல்

ஆன்லைன் மளிகை வர்த்தகம் உயரும்.... ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மளிகை வர்த்தகம் உயரும் என ஸ்பென்சர் சில்லறை வர்த்தக வணிகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் வெளியே சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைனில் தங்களுக்குத் தேவையான மளிகை பொருட்கடளை வாங்கும் மக்கள் அதிகரித்து விட்டது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மளிகை வர்த்தகம் 76 சதவீதம் அதிகமாக இருக்கும் என ஸ்பென்சர் சில்லறை வர்த்தக வணிக தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போனில் மக்கள் தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல, குறைந்த கட்டணத்தில் இணைய வசதியும் உள்ளதால் ஆன்லைனில் மளிகை வாங்குவத அதிகரித்து உள்ளது. இதனால் மளிகை வர்த்தகம் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என்று அவர் கூறியுள்ளார்.