ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

ஐகூ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் களமிறங்கியது. இந்தியாவில் ஐகூ நிறுவனத்தின் ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஆறு மாதங்கள் கழித்து ஐகூ தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முந்தைய ஐகூ 3 போன்றே ஐகூ 5 மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதனிடையே ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 17 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய ஐகூ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களும் தெரியவந்து இருக்கிறது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே, ஒற்றை பன்ச் ஹோல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பற்றி எவ்வித தகவலும் இல்லை எனினும், இதில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.