சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து தங்கத்தின் விலையும் உயர தொடங்கியது.

இந்த ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து கொண்டு வருகிறது.

இதை அடுத்து சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56 உயர்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசு குறைந்து ரூ.60.00-க்கும், ஒரு கிலோ 60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பு இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.