சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்தது

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் கொண்டு வருகிறது. ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 -ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனையாகிறது.

மேலும் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,128-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,600-ஆக இருக்கிறது.