ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 17-ந் தேதி தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று 37 ஆயிரத்து 440-க்கு விற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 821 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 10 காசு அதிகரித்து 68 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.