காஷ்மீர் ஆப்பிள் விற்பனை பாதிப்பு... ஈரானிய ஆப்பிள் வரத்து அதிகரிப்பு

காஷ்மீர்: காஷ்மீர் ஆப்பிள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. காரணம் ஈரானிய ஆப்பிள் விற்பனை அதிகரித்துள்ளதாம். இதனால் காஷ்மீர் ஆப்பிள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

காஷ்மீரின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் ஆப்பிள் வியாபாரம் அண்மைக்காலத்தில் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது.

அதிக அளவிலான உற்பத்தி, பதப்படுத்துதலுக்கு போதிய வசதியின்மை போன்ற காரணங்களுடன் ஈரானிய ஆப்பிள்களின் விற்பனையால் இந்தியாவில் காஷ்மீர் ஆப்பிள்களின் விலை சரிந்துள்ளது.

இந்த ஆண்டு பம்பர் உற்பத்தி காஷ்மீர் பகுதியில் அதிகளவில் ஆப்பிள் விளைந்தபோதும், விலை பாதியாக குறைந்து விட்டதால் அவற்றைப் பதப்படுத்த இடம் இல்லாமல் ஆப்பிள் விவசாயிகளின் வருவாய் பாதியாகக் குறைந்துள்ளது.