நடப்பு மாத சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்து தான் எல்பிஜியின் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தையை எல்பிஜி விலை அதிக அளவில் சார்ந்து உள்ளது.

இதையடுத்து மாதத் தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் எரிவாயுவின் விலையானது திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் சிலிண்டரின் விலை ஆனது 2 மடங்கு விலை உயர்வை அடைந்துள்ளது.


இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபாய் 200 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. எனவே இதன்படி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் ரூபாய் 918.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடப்பு அக்டோபர் மாதத்தில் வீட்டு எரிவாய்வு சிலிண்டரின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே நேரம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் ரூபாய் 203 அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1898க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.