எல்ஜி நிறுவனத்தின் இரண்டு ஸ்கிரீனுடன் சுழலும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவன புதிய அறிமுகம்... எல்ஜி நிறுவனம் இரண்டு ஸ்கிரீனுடன் சுழலும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சுழலும் தன்மை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் விங் ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் மேலும் 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 620 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது