ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படவில்லை ... அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

சென்னை: பச்சை நிற பாக்கெட் பாலுக்குப் பதிலாக ஊதா நிற பாக்கெட் பால் .... சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, “ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி கொண்டு வருகிறோம். ஆவின் பச்சை நிற பாலை பொறுத்தவரை பசும்பாலில் 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் அறிவியல் பூர்வமாக பார்த்தால் இன்றைய வாழ்க்கை தரத்திற்கு இந்த கொழுப்பு தேவையற்ற ஒன்று. எனவே அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இன்றைய சுழலில் பசும் பாலின் தரத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

பச்சை நிற பாக்கெட் பாலை விட ஊதா நிற பாக்கெட் பால் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை.

எனவே மக்களின் நலன் கருதி பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்காமல் ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை” என அவர் கூறினார்.