இந்திய சந்தையில் ஜூன் 25 ஆம் தேதி ஒப்போ என்கோ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

இந்திய சந்தையில், என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய இயர்பட்ஸ் ஒப்போ நிறுவனத்தின் டபிள்யூ31 மாடலின் விலை குறைந்த வெர்ஷன் ஆகும். புதிய இயர்பட்ஸ் குறைந்த அளவு லேடென்சி கொண்டிருக்கும் என்றும் இதன் இணைப்பு மற்ற ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை விட அதிக சீராக இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.

ஒப்போ என்கோ டபிள்யூ11 இயர்பட்ஸ் மற்ற இயர்பட்ஸ் போன்றே காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள மூன்று இயர்டிப்கள் வெவ்வேறு அளவுகளில் வழங்கப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் கேசினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

ஒப்போ என்கோ டபிள்யூ11 சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி
- 8 எம்எம் டிரைவர்
- டச் கண்ட்ரோல் வசதி
- அழைப்புகளுக்கு நாய்ஸ் கேன்சலேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 40 எம்ஏஹெச் பேட்டரி
- யுஎஸ்பி டைப்-சி

இந்தியாவில் புதிய ஒப்போ என்கோ டபிள்யூ11 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.