ஓப்போ ரெனோ-5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் அறிமுகமானது...மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 1000 ஜி எஸ்ஓசி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றினையும் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 மூலம் கலர் ஓஎஸ் 11.1 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் ஒப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.