மினி ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியது பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனத்தின் மினி ஆப் ஸ்டோர்... பேடிஎம் நிறுவனம் தற்போது பண வரித்தனைக்குப் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கிய செயலியாக இருந்து வருகின்றது, மேலும் இந்த செயலியானது ஆன்லைன் பரிவர்த்தனைக்காக மட்டுமல்லாது ரீசார்ஜ், ஆன்லைன் கடைகள், மின் கட்டணம் எனப் பலவற்றிலும் பண செலுத்தப் பயன்படுகின்றது.

அதிக அளவில் பயனர்களைக் கொண்டுள்ள இந்த பேடிஎம் நிறுவனம் தற்போது அதன் மினி ஆப் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் பயனர்களைக் கவரும் வகையில் நிச்சயம் இருக்கும். அதாவது வெப் ப்ரவுஸர் வழியாக இயங்கக்கூடிய லைட் ஆப்கள் இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைக்கு குறைந்த அளவில் உள்ள இந்த செயலிகள் இன்னும் சில நாட்களில் 300சேவைகள் வரை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அதாவது டெவலப்பர்களுக்கு Paytm Wallet, Paytm Payments Bank, மற்றும் UPI உள்ளிட்ட இலவச கட்டண வழிகளையும் Paytm வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது இரண்டு சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மினி ஆப் ஸ்டோர் பீட்டா சோதனையில் இருந்த நிலையில் தற்போது பயனர்களுக்கு கிடைக்க வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.