இந்தியாவில் பண்டிகை காலத்தில் பல லட்சம் சாதனங்களை விற்பனை செய்த ரியல்மி பிராண்டு

சமீபத்திய பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி மட்டும் சுமார் 83 லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் அதிகம் ஆகும். உலகில் ஐந்து கோடி சாதனங்களை வேகமாக விற்பனை செய்த பிராண்டாக ரியல்மி இருக்கிறது.

இந்த விற்பனையில் மூன்று கோடி சாதனங்கள் இந்தியாவில் மட்டும் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக ரியல்மி இருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் dare to leap நிலைப்பாடு காரணமாக வெளியான 30 மாதங்களில் வேகமான வளர்ச்சியை பெற முடிந்ததாக ரியல்மி தெரிவித்துள்ளது.

2020 ஆண்டில் ரியல்மி பிராண்டு 50 இண்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. ரியல்மி டிசைன் ஸ்டூடியோவில் உலக தரம் மிக்க வடிவமைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றியது.

இதனால் ஐந்து விருதுகளை ரியல்மி பிராண்டு சர்வதேச சந்தையில் வென்று இருக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வந்தது ரியல்மி தனது சாதனங்களை விற்க ஏதுவாக அமைந்தது.