ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

ஜியோவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனம்... இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ திகழ்கிறது. கடந்த சில வாரங்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்து வருகின்றன.

ஜியோவில் 43,574 கோடி முதலீடு செய்த பேஸ்புக் நிறுவனம், இதன் மூலம் 9.99 சதவீத பங்குகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதே போல் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனமும் ஜியோவின் 1.5 சதவீத பங்குகளை ரூ. 5,655 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான விஸ்டா நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2.32% பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பங்கு மதிப்பு 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்பதை கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனமான ஜியோவில் பிரபல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஜியோ நிறுவனத்தில் ரூ.60,596.37 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.