பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கணிசமாக அதிகரிப்பு


பாகிஸ்தான் : விலை கடும் உயர்வால் பொதுமக்கள் அவதி ... பாகிஸ்தான் நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் வீழ்ச்சியடைந்ததையடுத்து கடந்த 4 மாதங்களில் மட்டுமே 65 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

எனவே இதனை சரிக்கட்டும் விதமாக நுகர்வோருக்கான எரிவாயு விலையை கணிசமாக அதிகரித்து உள்ளது. மேலும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் ஜூலை முதல் அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் விலையை நுகர்வோர் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு, நாட்டில் திடீரென எரிவாயுக்களின் விலை உயர்த்தப்பட்டதால் உள்நாட்டு, ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி அல்லாத யூனிட்கள் மற்றும் சிஎன்ஜி, சிமென்ட் மற்றும் பிற தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

மேலும் எரிவாயுக்களின் விலை உயர்வதனால் 2024 நிதியாண்டில் பணவீக்கம் 26.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட இருக்கின்றனர்.