தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை சற்று அதிகரிப்பு


சென்னை: தாறுமாறாக உயரும் காய்கறிகளின் விலை ... தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர் திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது.

எனவே இதன் காரணத்தாலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்து உ=ள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் திடீரென உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் காய்கறிகள் உள்ள மேலும் அதிகரிக்கும் எனவே கூறப்படுகிறது.

விலை நிலவரம்:

உருளைக்கிழங்கு – ரூ. 32
பீட்ரூட் ரூ.40
பச்சை மிளகாய் ரூ. 30
தக்காளி ரூ.18
சின்ன வெங்காயம் ரூ. 90
பெரிய வெங்காயம் – ரூ. 30
பீன்ஸ் – ரூ. 90
கேரட் – ரூ. 30
காலிபிளவர் – ரூ. 25
சுரைக்காய் – ரூ. 20
முட்டைகோஸ் – ரூ.15
கத்தரிக்காய் – ரூ. 50
வாழைப்பூ – ரூ. 25
முருங்கைக்காய் – ரூ. 60