இன்று தங்கத்தின் சவரனுக்கு இவ்வளவு சரிவு

சென்னை: மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் நாள்தோறும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை நேற்று வழக்கம் போல் கூடியது.

பங்கு சந்தை நிலவரமும், நிலவி வரும் பொருளாதார மந்தநிலையும் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் ஒரு சில காரணிகளாக அமைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

எனவே அதன்படி, இன்று கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ. 5345 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ. 280 சரிந்து ரூ.42760 என விற்பனையாகி வருகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5707 எனவும் ஒரு சவரன் ரூ.45656 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ரூ.74.60 எனவும், ஒரு கிலோ விலை ரூ.74600 எனவும் விற்பனையாகி வருகிறது