தங்கத்தின் விலை இன்று அதிரடி குறைவு


சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்துஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாகவே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து , ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 29ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து, ரூ.43,120க்கு விற்பனையானது. செப் மாதத்தின் இறுதி நாளான 30ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240‬‬ குறைந்து 1 சவரன் ரூ.42,880 ஆக விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனையானது.

நேற்றைய நிலவரப்படி இந்த ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 42 ஆயிரத்து 842 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 528 ரூபாய் குறைந்துள்ளது. எனவே இதன் மூலம் 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 42,320 ஆக விற்பனையாகிறது .அதேபோல் 1 கிராம் தங்கத்தின் விலை 66 ரூபாய் குறைந்து 5,290 ரூபாயாக உள்ளது.