இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை

சென்னை: வரலாறு காணாத அதிகரிப்பு .... புத்தாண்டு முதலே தங்கத்தின் விலையில் தொடர் ஏற்றம் தான் நிலவி கொண்டு வருகிறது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய தினங்களில் தங்கம் விலை குறைந்தது. மேலும் ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது.

இதோடு நேற்று (01.02.2023) மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத ஏற்றம் காணப்பட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.43,320-க்கு விற்பனையானது.

இதையடுத்து இந்நிலையில் இன்று (02.02.2023) காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77300 க்கு விற்கப்படுகிற