சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இவ்வளவு குறைந்ததுள்ளது

சென்னை: சவரனுக்கு ரூ.360 குறைவு ..... சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே உச்சத்தை தொட்டது. இதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி கொண்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளது.

இதையடுத்து கடந்த 12ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்தது. எனவே இதன் மூலம் ஒருகிராம் தங்கம் ரூ.5580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640 -க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து 1சவரன் சவரன் ₹44,720-க்கு விற்பனையானது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,550 -க்கு விற்பனையானது. அதேபோன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்க்கு விற்பனையாகிறது.