கடந்த சில தினங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரிப்பு


சென்னை: இந்தியாவில் தீபாவளி பண்டிகைகள் வர உள்ள நிலையில் ஆபரணத் தங்கத்தின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாகவே பண்டிகை தினங்களில் மக்கள் புதிய தங்க அணிகலன்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிப்பர்.

இதையடுத்து இத்தகைய சூழலில் அதன் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 45,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,715-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி கொண்டு வருகிறது.

மேலும் அதே போன்று வெள்ளியின் விலை ரூ.78-க்கும் கிலோ ரூ. 78,000-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.