ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதேபோன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 4,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 10 பைசா அதிகரித்து, ரூ.61.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,100 அதிகரித்து ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது.