ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை இவ்வளவா ... அதிர்ச்சியில் பொதுமக்கள் !

சென்னை: மல்லிகை பூ விலை அதிரடியாக உயர்வு ... கார்த்திகை மாதம் வளர்பிறை முதல் முகூர்த்த நாள் என்பதால் அனைத்து வகையான பூக்களின் விலையும் மிகவும் அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லி ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து மல்லிகைப்பூவின் அடையாளமான மதுரையில்,மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூரூ. 3500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போன்று திருநெல்வேலி பூச்சந்தையிலும் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் இன்று மல்லிகை பூ கிலோ ரூபாய் 5000க்கு ஏலம் போனது.சராசரியாக ஆண்டிபட்டி மலர் சந்தைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் கிலோ அளவிற்கு மல்லிகை பூ வரத்து இருக்கும் நிலையில் தற்போது 100 கிலோவுக்கு குறைவாகவே வரத்து இருக்கிறது.

பிரபல மலர் சந்தையான தோவாளை சந்தையிலும் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளது.மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று 1500 ரூபாய் வரை விற்பனையான மல்லிப்பூ இன்று காலையில் ரூ.3500 - ரூ. 4000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.