டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதி

சீனாவின் டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டேன்ஸ், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் ஆகியவை இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் டிக்டாக் நிறுவனம் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உலக அளவில் டிக்டாக்கின் பங்கில் 53 விழுக்காட்டினை வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 10 கோடி அமெரிக்கர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.