இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனை அடுத்து இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை:சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்துஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலை: சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.90-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,900-க்கு விற்பனையாகிறது.