இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக இவ்வளவு உயர்வா ?

சென்னை: இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை ..... இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்ந்தது. இதனால் தங்கத்தின் விலையானது திடீரென சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. அதை தொடர்ந்து ஜிஎஸ்டி வரியும் உயர்த்தபட்டது.

இதன் விளைவாக தங்கம் விலை மேலும் அதிகரித்தது. இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் திருமணத்திற்கு நகை வாங்குவோரும் பொருளாதார ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்த நேரத்தில் பல காரணங்களால் கடந்த ஓரு வார காலமாக தங்கம் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடர்ந்து உயர்ந்துகொண்டே கொண்டே வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்துள்ளது.

இதனையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 39,520க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல ஒரு கிராம் விலை ரூ.39 உயர்ந்து 4,940க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.68500 ஆக விற்பனையாகிறது.