குறைந்த விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன் ஐடியா!

வாடிக்கையாளர்களை கவர புதிய பிரீபெயிட் சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த புதிய சலுகையை ரூ. 29 -ல் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் ரூ. 20 டாக்டைம், 100 எம்பி டேட்டா உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய ரூ. 29 சலுகை ஆல்ரவுண்டர் எனும் பெயரில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ரேட்கட்டர் எனும் பெயரில் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரூ. 20 டாக்டைம் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மெசேஜ்களுக்காக வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு பொருந்தும். 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையில் டாக்டைம் தவிர 100 எம்பி மொபைல் டேட்டாவும் வழங்கப்படுகிறது.

மற்ற சலுகைகளை போன்றே புதிய சலுகையும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் ரூ. 29 சலுகை டெல்லி வட்டாரத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த சலுகை அனைத்து வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.