இன்ஸ்டாவில் 2 மில்லியன் ரசிகர்கள்... உற்சாகத்தில் வரலக்ஷ்மி டான்ஸ்

சென்னை: வரலக்ஷ்மி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் இன்ஸ்டாவில் 2 மில்லியன் ரசிகர்கள் அவருக்கு கிடைத்து இருப்பது தான்.

வரலக்ஷ்மி என்றாலே அவர் நடித்த வில்லி ரோல்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். அவர் பல படங்களில் ரோலில் நடித்து இருந்தாலும் சண்டக்கோழி 2, சர்க்கார் என பல படங்களில் அவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரம் தான் அதிகம் பிரபலம்.

தற்போது சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று குடியேறி இருக்கும் அவர் அங்கு அதிகம் உடற்பயிற்சி செய்து தற்போது தனது எடையை அதிகம் குறைத்து இருக்கிறார்.

வரலக்ஷ்மி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். அவர் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் இன்ஸ்டாவில் 2 மில்லியன் ரசிகர்கள் அவருக்கு கிடைத்து இருப்பது தான்.