ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்தின் வீடியோ செம வைரல்

சென்னை: செம வைரலாகிறது… ரசிகர்களை சந்தித்து நடிகர் அஜித் பேசும் புதிய வீடியோ ஒன்று வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக சென்னை மவுண்ட் ரோட்டில் துணிவு படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையொட்டி வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் ரசிகர்களை அஜித் சந்தித்து பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


கேரவனுக்குள் இருந்து வெளியே வரும் அஜித் ரசிகர்களை நோக்கி கை காட்டி, தம்ஸ் அப் செய்து பின்னர் வணக்கம் தெரிவிக்கிறார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. துணிவு படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அஜித்தின் ரசிகர்கள் உள்ளனர்.