கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷின் தோற்றம் வெளியீடு

சென்னை: கேப்டன் மில்லருக்கான தனுஷின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. சரித்திர பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், கேப்டன் மில்லருக்கான தனுஷின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.