தேசிய விருது பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்

சென்னை: சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி, 69-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும்.

தேசிய விருது பெற்ற படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், “புஷ்பா படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!” என்று பதிவிட்டுள்ளார்.