நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படம் ஓடிடியில் வரும் 28ம் தேதி வெளியீடு

சென்னை: நடிகர் சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் ஓடிடியில் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன.

முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் நவ.28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.