காதலருடன் மோதிரம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா

மும்பை: இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அப்படியும் அவர் யார் என்பதை இலியானா வெளியிடவே இல்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து பின் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் நடிகை இலியானா.

தமிழில் சில படங்கள் நடித்தாலும் விஜய்யுடன் அவர் நடித்த நண்பன் திரைப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு கட்டத்தில் இலியானாவை சினிமா பக்கம் காணவில்லை.

அதற்கு பதிலாக எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

அப்படி தான் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார். இதுநாள் வரை தனது காதலர் யார் என்று கூறாமல் இருந்த இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அப்படியும் அவர் யார் என்பதை இலியானா வெளியிடவே இல்லை.