30ம் தேதி எனக்கு திருமணம் என அறிவித்தார் நடிகை காஜல்; அதிர்ச்சியில் படக்குழு

எனக்கு வரும் 30ம் தேதி திருமணம் என்று நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அப்போ இந்தியன்-2 கமலுடனான வாழ்க்கை என்னாவது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தியில் நடித்துக்கொண்டிருந்த காஜல் அகர்வால் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகம் ஆனால். தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை காஜல் திருமணம் செய்ய போகிறார் என்று தகவல்கள் உலா வந்தன.

அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக தனக்கு வரும் 30ம் தேதி திருமணம் ஆகப்போகிறது என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தம் குறித்து வதந்திகள் வந்தது. இதனால் இவரது ரசிகர்கள் ஏக மன வருத்தத்தில் இருக்கிறார்கள். அதைவிட இந்தியன் 2 படக்குழு இவர் மீது அப்செட் ஆக இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

சில ரசிகர்கள் கிண்டலாக, “அப்போ இந்தியன் 2 கமலோட வாழ்க்கை!” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.